< Back
தேசிய செய்திகள்
லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய 9 பேர் பலி
தேசிய செய்திகள்

லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து: திருமண விழாவில் பங்கேற்று திரும்பிய 9 பேர் பலி

தினத்தந்தி
|
21 April 2024 1:19 PM IST

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு திரும்பியபோது விபத்து நிகழ்ந்துள்ளது.

கோட்டா:

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டம், ஏக்லரா கிராமத்தின் அருகே இன்று அதிகாலையில் ஒரு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் கார் முற்றிலும் சிதைந்து உருக்குலைந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 8 பேர் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் மீட்கப்பட்டு ஜலாவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஒருவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் அனைவருக்கும் 18 முதல் 30 வயது வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள துங்ரி கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு காரில் திரும்பியபோது இன்று அதிகாலை 2.45 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது என ஜலாவர் எஸ்.பி. ரிச்சா டோமர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்