< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சட்டசபை தேர்தலில் நிகில் போட்டியிட மாட்டார்; குமாரசாமி அறிவிப்பு
|26 July 2022 10:58 PM IST
சட்டசபை தேர்தலில் நிகில் போட்டியிட மாட்டார் என்று குமாரசாமி அறிவித்துள்ளார்.
மண்டியா:
மண்டியா மாவட்டம் மத்தூருக்கு வந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் நிகில் குமாரசாமி (குமாரசாமி மகன்) போட்டியிடமாட்டார். அவர் 40 தொகுதிகளின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும். அதனால் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடமாட்டார். பேபிமலை பகுதியில் கல்குவாரிகளில் வெடி வைத்து சோதனை நடத்த விவசாயிகள் கடும் எதிர்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். ஒக்கலிக சமுதாயம் பற்றி ஜமீர்அகமதுகான் எம்.எல்.ஏ. கூறிய கருத்துக்கு ஒக்கலிக சமுதாய மக்களே பதிலடி கொடுப்பார்கள் என்றார்.