< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி
தேசிய செய்திகள்

டெல்லியில் நைஜீரிய பெண்ணுக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி

தினத்தந்தி
|
16 Sept 2022 5:10 PM IST

டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. டெல்லியில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபர் டெல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு குரங்கம்மை பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. டெல்லியில் கடந்த ஜூலை 24-ம் தேதி முதல் குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

மேலும் செய்திகள்