< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரூ.2 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்திய நைஜீரிய பெண் கைது
|10 Dec 2023 3:16 PM IST
போதை பொருளை தனது உடைகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
புதுடெல்லி,
மும்பையிலிருந்து டெல்லிக்கு ரூ.2 கோடி மதிப்பிலான போதை பொருளை கடத்த முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், விக்டோரியா ஒக்காபார் எனும் நைஜீரியப் பெண், மும்பையிலிருந்து டெல்லிக்கு 20 காப்சூல் போதை பொருளை தனது உடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பிடிக்கப்பட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, தனக்கு அந்த வேலையைக் கொடுத்த நபரின் பெயர் 'ஒன்யே' எனவும் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தப் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.