< Back
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது
தேசிய செய்திகள்

டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண் கைது

தினத்தந்தி
|
3 Nov 2022 5:00 AM IST

டெல்லி விமான நிலையத்தில் ரூ.30 கோடி போதைப்பொருளுடன் நைஜீரிய பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது லாகோசில் இருந்து தோகா வழியாக டெல்லி வந்த நைஜீரியப்பெண் ஒருவரின் உடைகளை அவர்கள் சோதித்தனர்.

அப்போது அந்த பெண் தனது பையில் சுமார் 4 கிலோ ஹெராயின் போதைப்பொருளை மறைத்து கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை கைது செய்த அதிகாரிகள், அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்