< Back
தேசிய செய்திகள்
புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை...!
தேசிய செய்திகள்

புதிய உச்சம் தொட்ட இந்திய பங்குச்சந்தை...!

தினத்தந்தி
|
15 Dec 2023 4:09 PM IST

இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளது.

மும்பை,

இந்திய பங்குச்சந்தை கடந்த அக்டோபர் இறுதி வரை இறங்குமுகமாக இருந்தது. அதன்பின்னர், நவம்பர் தொடக்கம் முதல் பங்குச்சந்தை மீண்டும் ஏறுமுகம் கண்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தை ஏறுமுகத்திலேயே உள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்தல், சர்வதேச பங்குச்சந்தைகளின் சாதக நிலை, பொருளாதார நிலைத்தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தை ஏறுமுகத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளன. அதன்படி, வர்த்தக இறுதியில் நிப்டி சுமார் 300 புள்ளிகள் அதிகரித்து 21 ஆயிரத்து 492 என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது. பேங் நிப்டி சுமார் 500 புள்ளிகள் அதிகரித்து 48 ஆயிரத்து 219 புள்ளிகளை தொட்டுள்ளது. சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் அதிகரித்து 71 ஆயிரத்து 605 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டுள்ளது.

பின் நிப்டி சுமார் 70 புள்ளிகள் அதிகரித்து 21 ஆயிரத்து 570 புள்ளிகளை தொட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தை புதிய உச்சம் தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்