< Back
தேசிய செய்திகள்
நைஸ் ரோடு சுங்க கட்டணமும் உயர்வு
தேசிய செய்திகள்

நைஸ் ரோடு சுங்க கட்டணமும் உயர்வு

தினத்தந்தி
|
2 July 2023 3:23 AM IST

பெங்களூருவில் நைஸ் ரோடு சுங்க கட்டணமும் 11 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.

பெங்களூரு:

நைஸ் ரோட்டில் கட்டண உயர்வு

பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் சுங்க கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூரு-மைசூரு எக்ஸ்பிரஸ் சாலையில் இன்னும் பல பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதால், யாரும் கட்டணம் கொடுக்க வேண்டாம் என்று மந்திரி செலுவராயசாமி அறிவித்துள்ளார்.

முதல் நாளான நேற்று 'பாஸ்டிராக்' ஸ்கேன் ஆகவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். இந்த நிலையில், பெங்களூரு நைஸ் ரோட்டிலும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண உயர்வும் நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

ரூ.15 வரை அதிகரிப்பு

அதாவது நைஸ் ரோட்டில் 11 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நைஸ் ரோட்டில் அடிப்படை வசதிகளை மேற்கொள்வது, பிற செலவுகளை காரணம் காட்டி நைஸ் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்பு இருந்த கட்டணத்தில் இருந்து சராசரியாக ரூ.5 முதல் ரூ.15 வரை இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு நைஸ் ரோட்டில் இருக்கும் ஓசூர் ரோடு-பன்னரகட்டா ரோடு, பன்னரகட்டா ரோடு-கனகபுரா ோடு, கனகபுரா ரோடு-குளோர் லீப், குளோபர் லீப்-மைசூரு ரோடு, மைசூரு ரோடு-மாகடி ரோடு, மாகடி ரோடு-துமகூரு ரோடு வரை செல்வதற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. நைஸ் ரோட்டில் சுங்க கட்டண உயர்வு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்