< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை
|12 July 2023 12:31 AM IST
காஷ்மீரில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஸ்ரீநகர்,
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று காஷ்மீரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினார்கள். பயங்கரவாதிகள் தொடர்பான வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
ஆனந்த்நாக், புல்வாமா, சோபியான் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்தது. சோதனை குறித்த கூடுதல் விவரங்களை புலனாய்வு அதிகாரிகள் வெளியிடவில்லை.