என்.ஐ.ஏ. விசாரணையில் உள்ள 12 கைதிகளை அந்தமான் சிறைக்கு மாற்ற திட்டம்
|2 கைதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திற்கு என்.ஐ.ஏ. கடிதம் எழுதியுள்ளது.
புதுடெல்லி,
தேசிய புலனாய்வு அமைப்பு(என்.ஐ.ஏ.) விசாரித்து வரும் குற்ற வழக்குகளில் பலர் கைது செய்யப்பட்டு நாட்டின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் டெல்லி, அரியானா, பஞ்சாப் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிறையில் இருந்தபடியே நிதி திரட்டுவது, பல இடங்களில் உள்ள குற்றவாளிகளோடு ஆலோசனை நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால் சுமார் 25 கைதிகளை தென் மாநில சிறைகளுக்கு மாற்ற ஆலோசனை நடத்தினர்.
ஆனால் அதில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதால், அந்த கைதிகளை யூனியன் பிரதேசமான அந்தமானுக்கு மாற்ற என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் முதலில் 12 கைதிகளை அந்தமான் சிறைக்கு அனுப்ப அனுமதி கோரி உள்துறை அமைச்சகத்திற்கு தேசிய புலனாய்வு அமைப்பு கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.