< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சென்னையில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் கைது: வெளிநாடு தப்ப முயன்றவரை பிடித்தது என்.ஐ.ஏ
|6 Sept 2023 3:18 PM IST
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
சென்னை,
திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்த ஐ.எஸ். தலைவர் சையது நபில் நேபாளத்திற்கு தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.