< Back
தேசிய செய்திகள்
மசூதி வடிவத்தில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் - ஒரு வாரத்துக்குள் அகற்ற நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு!
தேசிய செய்திகள்

மசூதி வடிவத்தில் கட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் - ஒரு வாரத்துக்குள் அகற்ற நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு!

தினத்தந்தி
|
17 Nov 2022 12:42 PM IST

கர்நாடகாவில் பேருந்து நிறுத்தம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது.

மைசூரு,

கர்நாடகாவில் பேருந்து நிறுத்தம் ஒன்று பார்ப்பதற்கு மசூதி போல உள்ளது.அந்த பேருந்து நிறுத்தம் மைசூரு-ஊட்டி சாலையில் உள்ளது. அதனை இடித்து தரைமட்டமாக்க வேண்டுமென்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பினார் மைசூர்-குடகு மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ள பா.ஜ.கவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா.

இந்த நிலையில், கர்நாடகாவில் மசூதி போல உள்ள பேருந்து நிறுத்தத்தை ஒரு வார காலத்துக்குள் அகற்ற அவகாசம் வழங்கி நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மைசூர் மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.மைசூரில் உள்ள பேருந்து நிறுத்தம் சர்ச்சைக்குரிய வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்காக கட்டப்பட்ட அமைப்பு என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்