< Back
தேசிய செய்திகள்
அனல்மின் நிலையத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த அறிக்கை தயாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாய குழு அமைப்பு
தேசிய செய்திகள்

அனல்மின் நிலையத்தால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த அறிக்கை தயாரிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாய குழு அமைப்பு

தினத்தந்தி
|
5 Dec 2022 5:23 AM GMT

அனல் மின் நிலையங்களில் இருந்து ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டது.

புதுடெல்லி

நிலக்கரி பயன்படுத்தி மின் உற்பத்தி நடைபெறும் அனல் மின்நிலையங்களின் சாம்பல் கொண்டு செல்வதைக் கண்காணிப்பதற்கும் மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பான அதிகாரிகள் உரிய சட்ட விதிகள் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த மனுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்தது. அதன்பின், மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிங்ராலி மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சோன்பத்ரா பகுதிகளில் உள்ள பல்வேறு அனல் மின் நிலையங்களில் இருந்து சாம்பலை எடுத்துச் செல்வதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்த உண்மை அறிக்கையை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு கூட்டுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்