< Back
தேசிய செய்திகள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகாலை 2 மணி வரை அனுமதி
தேசிய செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகாலை 2 மணி வரை அனுமதி

தினத்தந்தி
|
20 Nov 2022 12:15 AM IST

குடகில், டிசம்பர் 31-ந் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அதிகாலை 2 மணி வரை அனுமதி கேட்டு ஓட்டல் உரிமையாளர்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடகு:

கர்நாடகத்தில் கொரோனா தொற்று காலத்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல கெடுபிடி இருந்தது. இதனால் புத்தாண்டு தினத்தன்று ஓட்டல்கள், சொகுசு விடுதிகளுக்கு மக்கள் செல்வதற்கு கெடுபிடி இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்துவிட்டது. இதனால் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை (டிசம்பர் 31-ந் தேதியை) கூடுதல் நேரம் கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று ஓட்டல், சொகுசு விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


அதாவது ஜனவரி 1-ந் தேதி அதிகாலை 2 மணி வரை கொண்டாட அனுமதிக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். நேற்று இதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் சதீசிடம் ஓட்டல், சொகுசு விடுதி உரிமையாளர்கள் மனு அளித்தனர். அவர் அனுமதி வழங்குவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. அதற்கு ஓட்டல், சொகுசுவிடுதி உரிமையாளர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்