< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறை - மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவிப்பு
|10 Nov 2022 6:21 PM IST
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
புதுடெல்லி,
தனியார் சேனல்களுக்கு புதிய விதிமுறைகளை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி, தினமும் 30 நிமிடங்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த, பொது நலன் தொடர்பான நிகழ்ச்சிகளை தனியார் சேனல்கள் ஒளிப்பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுகாதாரம், கல்வி, கல்வியறிவு பரவல், சமூகத்தின் நலிந்த பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு அதிகாரமளித்தல், சுற்றுச்சூழல், தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய எட்டு முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.