< Back
தேசிய செய்திகள்
வங்கக்கடலில் ஆகஸ்ட் 7ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்
தேசிய செய்திகள்

வங்கக்கடலில் ஆகஸ்ட் 7ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம்

தினத்தந்தி
|
5 Aug 2022 9:51 AM IST

வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது.


தென்மேற்கு பருவமழை கேரளாவில் வலுவடைந்து இருக்கிறது. இதன் காரணமாகவும், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளை மறுநாளும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுநாள் உருவாகிறது. பின்னர், ஆகஸ்ட் 8ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 தினங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தமிழகத்தில் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்