< Back
தேசிய செய்திகள்
சிபிஎஸ்இ-யில் புதிய கல்விக் கொள்கை; அடுத்த ஆண்டு முதல் அமல்..!!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ-யில் புதிய கல்விக் கொள்கை; அடுத்த ஆண்டு முதல் அமல்..!!

தினத்தந்தி
|
21 Nov 2022 10:40 PM IST

புதிய கல்விக் கொள்கை, அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரும் என்று சிபிஎஸ்இ தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மாணவர்களின் எதிர்கால நலன்களை கருதி கல்விக்கொள்கையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய கல்விக்கொள்கை என்பது கடந்த 1968ல் முதன் முதலில் உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டு, இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் படி பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் தான் கஸ்தூரி ரங்கன் குழு வெளியிட்ட அறிக்கையின்படி 2020ல் புதிய கல்விக்கொள்கை முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய கல்விக்கொள்கையை பல பள்ளிகள் நடைமுறைப்படுத்தி உள்ளன.

இந்நிலையில் சிபிஎஸ்இ-யிலும் புதிய கல்வி முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சிபிஎஸ்இ தலைவர் நிதி சிப்பரின் தெரிவித்துள்ளார். மேலும் இது அடுத்த ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்படி, 10 +2 என்ற பள்ளிப்பாடமுறை மாற்றப்பட்டு 5+3+3+4 என்ற அடிப்படையில் 3 முதல் 8 வயது, 8 வயது 11 வயது, 11 முதல் 14 வயது மற்றும் 14-18 வயது ஆகிய மாணவர்களுக்காக பாடமுறை மாற்றப்பட உள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ வாரியத்துடன் இணைந்த பள்ளிகளும் தற்போதைய 10+2 அமைப்பிலிருந்து முன்மொழியப்பட்ட 5+3+3+4 ஒன்றுக்கு இடம்பெயர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி வாரியம் விரைவில் ஒரு உத்தரவை வெளியிடும் என்றும் சிபிஎஸ்இ தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்