< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் - இருவர் காயம்
|10 Nov 2022 9:16 PM IST
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்தனர்.
புதுடெல்லி,
புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இன்று இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு மாணவர்கள் காயமடைந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நர்மதா விடுதிக்கு அருகில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதாக இன்று மாலை 5 மணியளவில் அழைப்பு வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த பார்த்தபோது தனிப்பட்ட பிரச்சனை தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது தெரியவந்தது என்று போலீசார் கூறினர்.
மேலும் இதுவரை எந்த புகாரும் வரவில்லை என்று கூறிய போலீசார், புகார் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.