< Back
தேசிய செய்திகள்
மல்லிகார்ஜூன் கார்கே வரும் 26 ஆம் தேதி காங். தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல்
தேசிய செய்திகள்

மல்லிகார்ஜூன் கார்கே வரும் 26 ஆம் தேதி காங். தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
20 Oct 2022 9:16 PM IST

மல்லிகார்ஜூன் கார்கே வரும் 26 ஆம் தேதி காங். தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த தேர்தலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (வயது 80), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சசி தரூர் (66) இடையே நேரடி போட்டி ஏற்பட்டது.

17-ந் தேதி டெல்லி, சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட 68 இடங்களில் இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

இதில் மல்லிகார்ஜூன கார்கே அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் தோல்வியைத் தழுவினார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற மல்லிகர்ஜுன் கார்கே வரும் 26 ஆம் தேதி தலைவராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மல்லிகார்ஜூன் கார்கே பதவியேற்க உள்ளார்.

மேலும் செய்திகள்