சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி - கொலிஜீயம் பரிந்துரை
|சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமனம் செய்ய கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
சுப்ரீம்கோர்ட்டு கொலிஜீயம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை, ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
இதேபோல் மும்பை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலாவை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜீயம் பரிந்துரைத்துள்ளது.
ஒடிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முரளிதரின் பதவிக்காலம் 4 மாதங்களே உள்ள நிலையில் அவரை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது தொடர்பாக இதுவரை மத்திய அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பதால் அந்த பரிந்துரையை கொலிஜீயம் திரும்பப் பெற்றது.
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்றி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொலிஜீயம் பரிந்துரை செய்திருந்தது. ஆனால் இதனை மறுபரிசீலனை செய்யுமாறு அவர் கடிதம் எழுதியது நினைவுகூரத்தக்கது.