< Back
தேசிய செய்திகள்
பொதுமக்களின் அரசியல், சமூக மனநிலை மாற வேண்டும் என விரும்பியவர் நேதாஜி; அஜித் தோவல் பேச்சு
தேசிய செய்திகள்

பொதுமக்களின் அரசியல், சமூக மனநிலை மாற வேண்டும் என விரும்பியவர் நேதாஜி; அஜித் தோவல் பேச்சு

தினத்தந்தி
|
17 Jun 2023 12:42 PM IST

பொதுமக்களின் அரசியல், சமூக மற்றும் கலாசார மனநிலை மாற வேண்டும் என நேதாஜி விரும்பினார் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நினைவகத்தில் நடந்த சொற்பொழிவில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, முழு சுதந்திரம் மற்றும் விடுதலையை விட குறைவான எந்தவொன்றுக்காகவும் நான் சமரசம் செய்து கொள்ளமாட்டேன் என்று நேதாஜி கூறுவார். அரசியல் அடிபணிதலில் இருந்து இந்த நாடு விடுதலை பெற வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், பொதுமக்களின் அரசியல், சமூகம் மற்றும் கலாசார மனநிலை மாற வேண்டிய தேவை உள்ளது என விரும்பியவர் நேதாஜி.

அவர்கள், வானில் பறந்து செல்லும் சுதந்திர பறவைகளாக உணர வேண்டும் என்றும் நேதாஜி விரும்பினார் என தோவல் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்