< Back
தேசிய செய்திகள்
நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு நாள்:பிரதமர் மோடி  மரியாதை
தேசிய செய்திகள்

நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு நாள்:பிரதமர் மோடி மரியாதை

தினத்தந்தி
|
27 May 2023 6:35 AM GMT

நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மற்றும் நீண்ட காலம் பிரதமராக இருந்த நேரு 1964 இல் பதவியில் இருந்தபோது இறந்தார். மோடி தனது ட்விட்டர் பதிவில், "நமது முன்னாள் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதல் பிரதமரான நேரு மே 27, 1964 அன்று, உயிர் நீத்தார். அவர் 1947 முதல் 1964 வரை தனது 74வது வயதில் இறக்கும் வரை பிரதமராக இருந்தார். அவர் குழந்தைகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார், குழந்தைகள் அவரை சாச்சா நேரு என்று அழைப்பார்கள்.

ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்