< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மருத்துவ மேற்படிப்புகளுக்கு ஜூலை முதல் வாரத்தில் நீட் தேர்வு
|7 Jan 2024 1:06 AM IST
நீட் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
'நெக்ஸ்ட்' தேர்வு அமல்படுத்தப்படும் வரை மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடரும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான ஒழுங்குமுறைகளில் கூறப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்படாது. அதற்கு பதிலாக நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
மருத்துவ மேற்படிப்புகளுக்கான இந்த நீட் தேர்வு ஜூலை முதல் வாரத்தில் நடத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. மேலும் ஆகஸ்டு முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.