< Back
தேசிய செய்திகள்
நீட் தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
தேசிய செய்திகள்

நீட் தேர்வு: நாளை முதல் ஹால்டிக்கெட் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

தினத்தந்தி
|
10 July 2022 11:33 AM IST

நீட் தேர்வு வரும் 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அறிவித்து உள்ளது.

தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் இந்த தேர்வை எழுத முடியும். கடந்த ஆண்டு நீட் தேர்வின் போது கொரோனாவை கருத்தில்கொண்டு 200 வினாக்கள் கொடுத்து 180 வினாக்களுக்கு பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு புதிதாக தேர்வுக்கான நேரத்தை அதிகரித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 20 நிமிடம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்படுகிறது. தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணிக்கு நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வரும் 17ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கு நாளை (11.07.2022) திங்கட்கிழமை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேர்வர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்