கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவை - பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
|கிரிப்டோகரன்சி தொடர்பாக உலகளாவிய கட்டமைப்பு தேவைப்படுவதாக பி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
டெல்லியில், இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பி-20 உச்சி மாநாடு நடந்தது. அதில், பிரதமர் மோடி பேசியதாவது:-
நான்காம் தலைமுறை தொழில் சகாப்தத்தில், டிஜிட்டல் புரட்சியின் முகமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. உலக அளவில் திறமையான, நம்பகமான வினியோக சங்கிலி தொடரை கட்டமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்துள்ளது.
கிரிப்டோகரன்சி என்னும் டிஜிட்டல் பணம், சவால் நிறைந்ததாக இருக்கிறது. அத்துறையில் அதிகபட்ச ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். எனவே, அனைத்து தரப்பினரின் நலன்களை பாதுகாக்கக்கூடிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவது அவசியம். அதுபோல், செயற்கை நுண்ணறிவு தொடர்பாகவும் அதேவிதமான அணுகுமுறை தேவைப்படுகிறது.
நுகர்வோர் பாதுகாப்பில் வர்த்தக நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச வர்த்தக நிறுவனங்கள், ஆண்டுக்கு ஒரு நாள், 'சர்வதேச நுகர்வோர் பாதுகாப்பு தினமாக' கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.