< Back
தேசிய செய்திகள்
அசாமில் கனமழை, வெள்ளம் காரணமாக 29 ஆயிரம் பேர் பாதிப்பு
தேசிய செய்திகள்

அசாமில் கனமழை, வெள்ளம் காரணமாக 29 ஆயிரம் பேர் பாதிப்பு

தினத்தந்தி
|
15 Jun 2023 11:47 PM IST

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக 3 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்துவருகிறது. குறிப்பாக மாநிலத்தின் தேமாஜி, திப்ருகார் மற்றும் லக்கிம்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 29 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, 25 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும், மாநிலம் முழுவதும் 215.57 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. லக்கிம்பூர், கோல்பரா, பிஸ்வநாத், தேமாஜி, பக்சா, திமா ஹசாவ் மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

அசாமில் தற்போது வரை எந்த நதியும் அபாய அளவை தாண்டி ஓடவில்லை. இதற்கிடையில் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்