< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
விராஜ்பேட்டை அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம்!
|10 Jun 2023 12:15 AM IST
விராஜ்பேட்டை அருகே காட்டெருமை தாக்கி பெண் படுகாயம் அடைந்தார்.
குடகு,
குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டா அருகே சன்னங்கி கிராமத்தை சேர்ந்தவர் சுபலட்சுமி (வயது 25). இவர் நேற்று முன்தினம் வனப்பகுதியையொட்டி உள்ள காபி தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து ெவளியேறிய காட்டெருமை ஒன்று சுபலட்சுமியை தாக்கியது. பின்னர் அந்த காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
காட்டெருமை தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சுபலட்சுமியை, அக்கம்பக்கத்து ேதாட்டத்தில் வேலை பார்த்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுபலட்சுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தங்கள் கிராமத்தில் காட்டெருமை அட்டகாசம் அதிகமாக இருந்து வருவதாகவும், அதனை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.