< Back
தேசிய செய்திகள்
உப்பள்ளி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 3 பேர் பலி
தேசிய செய்திகள்

உப்பள்ளி அருகே கார் கவிழ்ந்து பெண் உள்பட 3 பேர் பலி

தினத்தந்தி
|
14 Sept 2022 8:17 PM IST

உப்பள்ளி அருகே, கார் கவிழ்ந்து பெண் உள்பட 3 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது.

உப்பள்ளி;


கார் கவிழ்ந்து

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா வரூர் பகுதியில் உள்ள சாலையில் நேற்றுமுன்தினம் இரவு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னா், சாலையோர தடுப்பு மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் முற்றிலும் அப்பளம் போல் நொறுங்கியது. இதைப்பாா்த்து அதிா்ச்சி அடைந்த அப்பகுதியினர் ஓடிவந்து காரின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

அதில் ஒரு வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் உப்பள்ளி புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

3 பேர் பலி

பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் பெண் உள்பட 2 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் தாவணகெரே மாவட்டத்தை சோ்ந்த ஷாருன்(வயது 27), சோஹைல்(26) மற்றும் சிக்கமகளூருவை சோ்ந்த சுசீலா(35) என்பது தெரியவந்தது.

இதில் ஷாருன் கார் டிரைவர் ஆவார். அவர்தான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் வேலை விஷயமாக உப்பள்ளிக்கு வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்