< Back
தேசிய செய்திகள்
உன்சூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
தேசிய செய்திகள்

உன்சூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு

தினத்தந்தி
|
9 Oct 2022 12:45 AM IST

உன்சூர் அருகே பாம்பு கடித்து விவசாயி உயிரிழந்தார்.

மைசூரு;


மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா உத்தூரு கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டே கவுடா (வயது 56). விவசாயி. இவர் நேற்றுமுன்தினம் தனது விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அவரது நிலத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதை அறியாமல் அவர் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த பாம்பு, நஞ்சுண்டே கவுடாவின் காலில் கடித்துள்ளது. அதில் இவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதைபாா்த்து பக்கத்து தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து நஞ்சுண்டேகவுடாவை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து பிளிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்