< Back
தேசிய செய்திகள்
தாவணகெரே அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி
தேசிய செய்திகள்

தாவணகெரே அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலி

தினத்தந்தி
|
26 Aug 2023 12:15 AM IST

தாவணகெரே அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் ராணுவ வீரர் பலியானாா்.

தாவணகெரே

தாவணகெரே (மாவட்டம்) தாலுகா கத்தகல் கிராமத்தை சேர்ந்தவர் ஏரிமுனிஹேமப்பா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளன. ஏரிமுனிஹேமப்பா பஞ்சாப்பில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இந்தநிலையில் ஏரிமுனிஹேமப்பா விடுமுறைக்காக சொந்த ஊரான கத்தகல்லுக்கு வந்தார். சம்பவத்தன்று ஏரிமுனிஹேமப்பா தனது தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.

அப்போது ஏரிமுனிஹேமப்பா கத்தகல் அருகே வந்தபோது, ஏதிரே வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ஏரிமுனிஹேமப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊவினஹடகள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் ஏரிமுனிஹேமப்பா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஏரிமுனிஹேமப்பா உடல் உறிவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில், தாவணகெரே தாசில்தார் சரணம்மா மற்றும் ஊவினஹடகள்ளி போலீசார் ஏரிமுனிஹேமப்பா உடலுக்கு அரசு மரியாதை செலுத்தி அடக்கம் செய்தனர்.

மேலும் செய்திகள்