< Back
தேசிய செய்திகள்
புத்தூர் அருகே 200 கிலோ பாக்குகள் திருடிய 2 பேர் கைது
தேசிய செய்திகள்

புத்தூர் அருகே 200 கிலோ பாக்குகள் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
8 Aug 2023 12:15 AM IST

புத்தூர் அருகே 200 கிலோ பாக்குகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா அம்சினட்கா பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு கல்லுராயர். இவருக்கு சொந்தமான பாக்கு தோட்டம் அப்பகுதியில் உள்ளது. அதன் அருகே விஷ்ணு பாக்கு குடோன் வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் விஷ்ணு பாக்கு குடோனுக்கு சென்றார். அப்போது குடோனின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 200 கிலோ பாக்குகள், புல் வெட்டும் எந்திரம் ஆகியவற்றை காணவில்லை.

அவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதனை மர்மநபர்கள் திருடிசென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஷ்ணு புத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்்தநிலையில் குடோனில் 200 கிலோ பாக்குகள், எந்திரத்தை திருடியதாக காவு கிராமத்தை சேர்ந்த கிரண் குமார், சந்தோஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் 20 கிலோ பாக்குகள், புல் வெட்டும் எந்திரம், மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சினான் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்