< Back
தேசிய செய்திகள்
மைசூரு விமான நிலையம் அருகே  லாரி மோதி பெண் சாவு
தேசிய செய்திகள்

மைசூரு விமான நிலையம் அருகே லாரி மோதி பெண் சாவு

தினத்தந்தி
|
30 Sept 2023 12:15 AM IST

மைசூரு விமான நிலையம் அருகே லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிாிழந்தார்.

மைசூரு

மைசூரு (மாவட்டம்) தாலுகா உத்பூரு கிராமத்தை சேர்ந்தவர் சன்னம்மா (வயது60). இவர் மண்டஹள்ளி விமான நிலையம் அருகே ஒரு கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார்.

பின்னர் அங்கிருந்து சன்னம்மா வீட்டிற்கு செல்ல பஸ் ஏறுவதற்காக அப்பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிரே வந்த லாரி சன்னம்மா மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். சன்னம்மாவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கே.ஆர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்