மூடபித்ரி அருகே போதைப்பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
|மூடபித்ரி அருகே போதைப்பொருட்கள் விற்ற 2 ேபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மங்களூரு-
மூடபித்ரி அருகே போதைப்பொருட்கள் விற்ற 2 ேபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பயங்கரவாதிகள் 5 பேர் கைது
பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயங்கரவாதிகள் 5பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வாக்கி-டாக்கி ஆகியவற்றை மத்திய குற்றப்பரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பயங்கரவாதிகள் பெங்களூருவில் 10 இடங்களில் நாசவேலையில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இந்தநிலையில், மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில இடங்களில் மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் தட்சிண கன்னடா மாவட்டம் மூடபித்ரி தாலுகா குட்டக்காடு பஸ்நிலைய பகுதியில் சிலர் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக மங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போதைப்பொருட்கள் பறிமுதல்
அதன்பேரில் மங்களூரு குற்றப்பிரிவு போலீசார் முல்கி போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது பஸ்நிலையம் பகுதியில் நின்ற 2 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பியோடினர். அவர்கள் 2 பேரையும் போலீசார் துரத்தி சென்று பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மங்களூரு அருகே உள்ள கத்ரி பகுதியை சேர்ந்த முகமது இர்ஷாத் (வயது26), ஜெயநகரை சேர்ந்த கவுசிக் (29) என்பதும், அவர்கள் 2 பேரும் எம்.டி.எம்.ஏ. என்ற போதைப்பொருளை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
குறிப்பாக அவர்கள் போதைப்பொருட்களை கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் 2 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரம் மதிப்பிலான எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 2 செல்போன்கள், ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து முல்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை முயற்சி
கைது செய்யப்பட்ட கவுசிக் மீது ஏற்கனவே மங்களூரு போலீஸ் நிலையத்தில் ெசல்போன் திருட்டு, கஞ்சா வழக்கும், முகமது இர்ஷாத் மீது உல்லால் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் உள்ளது.