< Back
தேசிய செய்திகள்
மங்களூரு அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
தேசிய செய்திகள்

மங்களூரு அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
22 Jun 2023 12:15 AM IST

மங்களூரு அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு புறநகர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட நீர்மார்க்கம் பகுதியை சேர்ந்தவர் தேஜல் (வயது 16). இவள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய தேஜல் வீட்டினுள் சென்று கதவை அடைத்து கொண்டாள். வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டி திறக்குமாறு கூறினர். ஆனால் மாணவி திறக்கவில்லை. இதையடுத்து பெற்றோர் கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு தேஜல் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. தேஜலின் உடலை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தேஜலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மங்களூரு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்