< Back
தேசிய செய்திகள்
மங்களூரு அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துகொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேர் கைது
தேசிய செய்திகள்

மங்களூரு அருகேஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துகொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேர் கைது

தினத்தந்தி
|
22 Aug 2023 12:15 AM IST

மங்களூரு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மங்களூரு

மங்களூரு அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பொக்லைன் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

தனியார் வங்கி

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே சூரத்கல் போலீஸ் நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி இரவு ஏ.டி.எம். மையத்தில் மர்மநபர்கள் பொக்லைன் எந்திரத்துடன் பணத்தை திருட முயன்றனர்.

அப்போது அலார ஒலி சத்தம் கேட்டதால் அவர்கள் அங்கிருந்து பொக்லைன் எந்திரத்துடன் தப்பி சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தனியார் வங்கியின் மேலாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சூரத்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

பணம் திருட முயற்சி

அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மர்மநபர்கள் 4 பேர் பொக்லைன் எந்திரத்துடன் வந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைப்பதும் அலார ஒலி சத்தம் கேட்டதும் அவர்கள் தப்பி சென்றதும் தெரியவந்தது. இந்தநிலையில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட முயற்சி செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வந்தனர்.

மேலும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் உடுப்பி மாவட்டம் படுபித்ரியில் சாலையோரம் நிறுத்தியிருந்த பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், பொக்லைன் எந்திரம் சூரத்கல்லில் ஏ.டி.எம். மையத்தில் பணம் திருட மர்மநபர்கள் பயன்படு்த்திய தெரியவந்தது.

4 பேர் கைது

இந்தநிலையில் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவை சேர்ந்த தேவராஜ்

நாயக் (வயது24), பரத் (20), நாகராஜ் நாயக் (21), தன்ராஜ் நாயக் (22) ஆகிய 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சூரத்கல் ஏ.டி.எம். மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் உள்பட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் சிவமொக்கா மாவட்டம் வினோபா நகர் பகுதியில் நடந்த கோவிலில் திருட்டு, தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி, உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்