கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
|குந்துகோல் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா கொட்லிவாடா கிராமத்தைச் சோ்ந்தவர் அனுமப்பா(வயது 66). விவசாயியான இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 2½ ஏக்கரில் விளைநிலம் உள்ளது. இதில் அவர் பயிர்கள் பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் அனுமப்பாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடன் ெகாடுத்தவர்கள் பணத்தை திருப்பி தருமாறு அனுமப்பாவிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த விவசாயி அனுமப்பா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சிெகால்லி மருந்தை(விஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குந்துகோல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.