கடூர் அருகேகார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி
|கடூர் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார்
சிக்கமகளூரு
ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா மாவுத்தனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கல்லம்மா. இவர் தனது உறவினர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சிக்கமகளூருக்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா ஏமகிரி அருகே வந்த போது, பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். அப்போது டிரைவர் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடி தலைமறைவாகிவிட்டார்.
அதில் கல்லம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உறவினருக்கு பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, அவரை சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடூர் போலீசார், கல்லம்மாாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் அரிசிகெரேவை சேர்ந்த சவுடய்யாவை வலைவீசி தேடி வருகிறார்கள்.