< Back
தேசிய செய்திகள்
ஹலயங்கடி அருகே ஆற்றில் குதித்து தபால் ஊழியர் சாவு
தேசிய செய்திகள்

ஹலயங்கடி அருகே ஆற்றில் குதித்து தபால் ஊழியர் சாவு

தினத்தந்தி
|
14 July 2022 9:10 PM IST

ஹலயங்கடி அருகே ஆற்றில் குதித்து தபால் ஊழியர் உயிரிழந்தார்.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே ஹலயங்கடி பகுதியில் ஆறு ஒன்று பாய்கிறது. அந்த ஆற்றின் பாலத்தில் இருந்து வாலிபர் ஒருவர் திடீரென குதித்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக முல்கி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர் உடலை மீட்டனர்.

பின்னர் அதுகுறித்து நடத்திய விசாரணையில் அவர் மண்டியாவை சேர்ந்த ராகேஷ் கவுடா (வயது 26) என்பதும், அவர் மங்களூரு நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலைய ஊழியர் என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே அந்த பாலத்தில் இருந்து மற்றொரு வாலிபர் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு நின்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அவரை உடனடியாக மீட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முல்கியில் வசித்து வரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த தசரதா என்பதும், மனஉளைச்சலால் அவர் ஆற்றில் குறித்து தற்கொலை செய்ய முன்றதும் தெரியவந்தது. 2 சம்பவம் குறித்தும் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்