தார்வார் அருகே மின்னல் தாக்கி விவசாயி சாவு
|தார்வார் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தார்வார் டவுன் துர்கதகேரி பகுதியில் வசித்து வரும் விவசாயியான வீரப்பனவர்(வயது 55) என்பவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனை பொருட்படுத்தாமல் அவர் தொடா்ந்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைபார்த்து அதிர்ந்து போன அப்பகுதி மக்கள், உடனே தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வீரப்பனவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி விவசாயி வீரப்பனவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ேசாகத்தை ஏற்படுத்தி உள்ளது.