< Back
தேசிய செய்திகள்
சிக்கமகளூரு அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
தேசிய செய்திகள்

சிக்கமகளூரு அருகேமோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

தினத்தந்தி
|
23 Aug 2023 12:15 AM IST

சிக்கமகளூரு அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர் போலீசாா் கைது செய்துள்ளனர்

சிக்கமகளூரு:

சிக்கமகளூரு (மாவட்டம்) தாலுகா ஹாலேனஹள்ளி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சிக்கமகளூரு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்போில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ேமாட்டார் சைக்கிளை போலீசார் மறித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் அப்பகுதியை சேர்ந்த மனோஜ் (வயது 25) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சிக்கமகளூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்