< Back
தேசிய செய்திகள்
சன்னகிரி அருகே  பாக்கு மூட்டைகளை திருடிய 3 பேர் கைது
தேசிய செய்திகள்

சன்னகிரி அருகே பாக்கு மூட்டைகளை திருடிய 3 பேர் கைது

தினத்தந்தி
|
28 July 2023 12:15 AM IST

சன்னகிரி அருகே பாக்கு மூட்டைகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தாவணகெரே-

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது ஜாவத். இவருக்கு சொந்தமான பாக்கு தோட்டம் அப்பகுதியில் உள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று பாக்குகளை மூட்டைகளில் வைத்துவிட்டு முகமது வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு மர்மநபர்கள் தோட்டத்தில் புகுந்து 41 மூட்டைகளில் இருந்த பாக்குகளை திருடி சென்றனர்.

மறுநாள் காலை தோட்டத்திற்கு முகமது வந்து பார்த்தபோது பாக்கு மூட்டைகளை காணவில்லை. அவற்றின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். இதுகுறித்து அவர் சன்னகிரி போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பாக்கு மூட்டைகளை திருடியதாக சிவமொக்கா மாவட்டம் செட்டி ஹள்ளி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், ஜாவித் அலி, அமீர்கான் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு லாரி, ரூ.7லட்சம் மதிப்பிலான பாக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்