< Back
தேசிய செய்திகள்
பண்ட்வால் அருகே  என்.ஐ.ஏ. அதிகாரியிடம் தகராறு; 2 பேர் கைது
தேசிய செய்திகள்

பண்ட்வால் அருகே என்.ஐ.ஏ. அதிகாரியிடம் தகராறு; 2 பேர் கைது

தினத்தந்தி
|
29 July 2023 12:15 AM IST

பண்ட்வால் அருகே என்.ஐ.ஏ. அதிகாரியிடம் தகராறு செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் டவுன் பி.சி. ரோட்டில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அலுவலகம் உள்ளது. அங்கு என்.ஐ.ஏ. அதிகாரியாக குமார் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது குடும்பத்துடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள், 2 பேரும் குமாரை தகாத வார்த்தைகளால் பேசி உள்ளனர். மேலும் அவரிடம் 2 பேரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமார் பண்ட்வால் போலீசில் புகார் அளித்தார்.

அதன் போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்.ஐ.ஏ. அதிகாரியிடம் தகராறு செய்தவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் தும்பே பகுதியை சேர்ந்த மனிஷ் பூஜாரி, மஞ்சுநாத் ஆச்சாரி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்