அஜ்ஜாம்புரா அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதல்; 2 பேர் பலி
|அஜ்ஜாம்புரா அருகே மோட்டார் சைக்கிள்- கார் மோதியதில் 2பேர் உயிரிழந்தனர்.
சிக்கமகளூரு-
சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 55). இவரது நண்பர் சுரேஷ் (48). இவர்கள் 2 பேரும் விவசாயிகள் ஆவர். இந்தநிலையில் சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சொந்த வேலை காரணமாக சிக்கமகளூவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அவர்கள் அஜ்ஜாம்புரா தாலுகா ஓசூர் கிராமம் அருகே வந்தபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட சுரேஷ், வெங்கடேஷ் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அஜ்ஜாம்புரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அஜ்ஜாம்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.