< Back
தேசிய செய்திகள்
ஜார்கண்ட் வனப்பகுதியில் நக்சல்கள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை! இரு நக்சல்கள் சுட்டுக்கொலை!!
தேசிய செய்திகள்

ஜார்கண்ட் வனப்பகுதியில் நக்சல்கள் - பாதுகாப்பு படையினர் இடையே கடும் சண்டை! இரு நக்சல்கள் சுட்டுக்கொலை!!

தினத்தந்தி
|
2 Sept 2022 1:25 PM IST

ஜார்கண்ட்டில் நக்சல்கள் மற்றும் பாதுகாப்புப் படையின் கூட்டுப்படை இடையே என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.

ராஞ்சி,

ஜார்கண்ட்டில் நக்சல்கள் மற்றும் சிஆர்பிஎப்-இன் கோப்ரா, ஜார்கண்ட் ஜாகுவார் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டுப்படை இடையே என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.

பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் குச்சாய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருடா வனப்பகுதியில் சிபிஐ(மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு நக்சல் முகாம் அழிக்கப்பட்டது. செரைகேலா-கர்சவான் மாவட்டத்தில் ஒரு பெண் வீராங்கனை உட்பட இரு நக்சல்கள் கொல்லப்பட்டனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் இருவரும் முக்கிய நக்சல் பிரிவான ஆண்டால் தா பிரிவை சேர்ந்தவர்கள். தேடப்படும் குற்றவாளியான ஆண்டால் தாவை பிடித்து கொடுப்பவர்களுக்கு அல்லது துப்பு கொடுபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நக்சல் துணை மண்டல கமாண்டர் சோட்டா வியாஸ் என்கிற ரவீந்திர மேத்தா என்பவர் கர்வா மாவட்டத்தில் உள்ள புடிகண்ட் கிராமத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட நக்சல், பீகார் மற்றும் ஜார்கண்ட் எல்லைப் பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தவர். இரு மாநிலங்களில் 16 வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்.

மற்றொரு நக்சல் தலைவரான பைரோன் கஞ்சு(பாஸ்கர்) என்கிற வீரப்பன், காசிடு வனப்பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து அதிநவீன அமெரிக்க ஆயுதம் உள்ளிட்ட மிகப்பெரிய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இவர் 16க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்