< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சத்தீஸ்கரில் நக்சலைட் தம்பதியினர் போலீசில் சரண்
|18 Aug 2023 5:28 AM IST
நக்சலைட் தம்பதியினர் சுக்மா மாவட்டத்தில் போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தனர்.
சுக்மா,
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் ஒரு நக்சலைட் தம்பதியினர் பதுங்கியிருந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இவர்கள் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தாக்குதலில் 17 பாதுகாப்பு பணியாளர்கள் பலியானார்கள். மேலும், கடந்த 2021-ம் ஆண்டு இவர்கள் நடத்திய தாக்குதலில் 21 பணியாளர்கள் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, நக்சலைட் தம்பதியினர் சுக்மா மாவட்டத்தில் நேற்று போலீசாரின் முன்னிலையில் சரணடைந்தனர். இந்த தம்பதியின் தலைக்கு போலீசார் தலா ரூ.1 லட்சம் பரிசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.