< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு
|20 Jun 2024 11:51 AM IST
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அம்மாநில எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா முதல் முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதன் மூலம் அங்கு 24 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்த நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாநில எதிர்க்கட்சி தலைவராக நவீன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார்.
கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நவீன் பட்நாயக் இதை தெரிவித்தார். அவர் கூறும்போது, 'பிஜு ஜனதாதள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. இதில் சட்டசபை எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக என்னை தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.