< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
நாட்றம்பள்ளி சாலை விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
|11 Sept 2023 5:48 PM IST
நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிட பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
புதுடெல்லி,
திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கிட பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் (எக்ஸ்) பதிவில், "தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர்களை இழந்தது வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
உதவித் தொகையாக உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.