< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம்
|27 Jun 2022 7:10 AM IST
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக, காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இளைஞர்களும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். எனினும், கடும் எதிர்ப்புகளையும் மீறி ஆள்சேர்ப்பதற்கான அறிவிப்புகளை ராணுவம் வெளியிட்டது.
இந்த நிலையில், இந்த திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.