< Back
தேசிய செய்திகள்
பால் மற்றும் பால் பொருட்கள் மீது நாடு தழுவிய கண்காணிப்பு - கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை
தேசிய செய்திகள்

பால் மற்றும் பால் பொருட்கள் மீது நாடு தழுவிய கண்காணிப்பு - கலப்படத்தை தடுக்க உணவு பாதுகாப்பு ஆணையம் நடவடிக்கை

தினத்தந்தி
|
25 May 2023 10:36 PM IST

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கலப்படத்தை தடுக்கும் முயற்சியில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பால் மற்றும் பால் பொருட்கள் மீது நாடு தழுவிய கண்காணிப்பை மேற்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளது. இந்த கண்காணிப்பில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர பன்னீர், நெய், வெண்ணெய், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களின் மாதிரிகளும் சரிபார்க்கப்படும். பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படம் செய்யப்படும் இடங்களை கண்டறிந்து, திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.



மேலும் செய்திகள்