< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
தேசிய காவலர் நினைவு தினம் - டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அமித்ஷா அஞ்சலி
|21 Oct 2023 5:41 PM IST
தேசிய காவலர் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள காவலர் நினைவிடத்தில் மத்திய மந்திரி அமித்ஷா அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி,
பணியின்போது உயிரிழந்த காவலர்களின் நினைவாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந்தேதி தேசிய காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959-ம் ஆண்டு லடாக்கில் சீன ராணுவத்தினரின் தாக்குதலில் 10 காவலர்கள் உயிரிழந்ததை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, காவல்படையினர் இல்லாமல் எல்லை பாதுகாப்போ, உள்நாட்டு பாதுகாப்போ சாத்தியமாகாது என தெரிவித்தார்.