< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கோர்ட்டில் ருசிகரம்: 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல்...69 வயதில் வழக்கை வாபஸ் பெற்ற தம்பதி...!
|16 Nov 2022 3:57 PM IST
59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த தம்பதி. 69 வயதில் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியை கரம்பிடித்துள்ளார் கணவர்.
பெங்களூரு,
இதுவரை இந்த உலகத்தில் உள்ள நீதிமன்றங்கள் பல்வேறு விதமான வழக்குகளை சந்தித்துள்ளன. அந்தவகையில் கர்நாடகாவில் உள்ள குடும்ப நல நீதிமன்றம் ஒரு புதுமையான வழக்கை எதிர்கொண்டது.
கர்நாடக மாநிலம் தும்கூரில் நடந்த லோக் அதாலத் நிகழ்வில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் மொத்தமாக 5 தம்பதிகள் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் சந்தோஷமாக இணைந்தனர்.
10 ஆண்டுகளுக்கு முன்பு தனது 59 வயதில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்த கணவர் தற்போது 69 வயதில் வழக்கை வாபஸ் பெற்று மீண்டும் மனைவியின் கரத்தை பிடித்துள்ளார். அவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.